ஜூலை 31ம் தேதிக்கு பிறகே உயர்கல்வி படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப நடைமுறைகளை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை தரமணியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பொன்முடி அவர்கள்,”அனைத்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு உதவும் வகையில் வழிகாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேருவதற்கு இணைய வழியில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கல்லூரிகளில் சேர்க்கை நடத்துவது குறித்து முதல்வரிடம் ஆலோசனை மேற்கொண்டு பின்னர் உறுதியாக அறிவிக்கப்படும்.
மேலும்,சிபிஎஸ்இ 12-வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 31ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.அந்த மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் ஜூலை 31ம் தேதிக்கு பிறகே பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும்” என்று தெரிவித்தார்.
ஆந்திரப்பிரதேசம் : தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம் சரனும் இப்பொது தெலுங்கு திரையுலகில்…
சேலம் : ஆத்தூரில் இருந்து வானவரம் மலை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து…
ஆஸ்திரேலியா : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…
சென்னை : அத்திக்கடவு-அவிநாசி 17 ஆகஸ்ட் 2024 அன்று நிறைவேற்றுப்பட்டது. இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி…
சென்னை : காதலர் தினமான வருகின்ற பிப்ரவரி 14 அன்று தமிழ் சினிமாவில் இருந்து ஒத்த ஓட்டு முத்தையா, 2கே…
குஜராத் : இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, இன்று அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான…