பொறியியல் படிப்பிற்கான ரேங்க் பட்டியலை வெளியிட்ட அமைச்சர் பொன்முடி.! முதல் 3 இடங்களை தட்டிச்சென்ற மாணவிகள்.!

Minister Ponmudi

இளங்கலை பொறியியல் படிப்பி சேருவதற்கான ரேங்க் பட்டியலைஅமைச்சர் பொன்முடி வெளியிட்டார். 

2023 -2024 கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழத்தில் கீழ் செல்லப்படும் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு ரேங்க் (மதிப்பெண் தரவரிசை) வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், இந்தாண்டு 1,87,847 ஆயிரம் பேருக்கு ரேங்க் பட்டியலிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டை விட சுமார் 18 ஆயிரம் மாணவர்கள் அதிகமாக இடம் பெற்றுள்ளனர். அரசுப்பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கான 7.5 இடஒதுக்கீட்டில் 31,445 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில், 15,136 மாணவர்களும், 13,284 மாணவிகளும், இதர வகுப்பபை சேர்ந்தவர்களும் இடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு கல்லூரி கட்டணம், விடுதி கட்டணம் கிடையாது என தெரிவித்தார்.

7.5 சதவீத இடஒதுக்கீட்டில் கடந்த ஆண்டு 28,425 மாணவர்கள் தரவரிசை பட்டியலில் இடம்பெற்று இருந்தனர். இந்தாண்டு 5,842 மாணவர்கள் அதிகம் இடம் பெற்றுள்ளனர். இந்தாண்டு அரசு பள்ளியில் பயின்ற 1 லட்சத்து 6 ஆயிரம் மாணவர்கள் ரேங்க் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் 405 மாணவர்களும்,  சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் பயின்றவர்கள் 20,084 மாணவர்களும் இடம்பெற்றுள்ளனர் என அமைச்சர் தெரிவிஹார்.

200க்கு 200 மதிப்பெண் பெற்று 102 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 100 பேர் மாநில கல்வி பயின்றவர்கள். இந்த மதிப்பெண் தரவரிசை பட்டியலில் திருச்செந்தூரை சேர்ந்த நேத்ரா எனும் பெண் முதலிடமும், தர்மபூரியை சேர்ந்த ஹரினிகா எனும் பெண் இரண்டாமிடமும், திருச்சியை சேர்ந்த ரோஷினி பானு மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.

அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களில் சைதைபேட்டையை சேர்ந்த மகாலட்சுமி எனும் மாணவி 200க்கு 200 மதிப்பெண் பெற்று முதலிடமும் , நாகப்பட்டினத்தை சேர்ந்த நிவேதிதா எனும் பெண் இரண்டாமிடமும் , கோவையை சேர்ந்த சரவணகுமார் எனும் மாணவர் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.

இந்த பொறியியல் படிப்பிற்கான மதிப்பெண் தரவரிசை பட்டியலில் ஏதேனும் குறைகள் இருந்தால 30.06.2023க்குள் மாணவர்கள் திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும், நீட் தேர்வு கலந்தாய்வு இன்னும் நடத்தப்படாமல் இருப்பதால், கலந்தாய்வு தேதி தள்ளிப்போகும் என கலந்தாய்வு தொடக்க தேதியை அமைச்சர் பொன்முடி அறிவிக்கவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Ajith Kumar Racing
Gargi Ranpara (8-year) died yesterday morning at a private school in Ahmedabad
heavy rain ALERT
sivasankar dmk tvk vijay
pm modi and mk stalin
tvk vijay about dmk