அமலாக்கத்துறை சோதனை.. விசாரணை.! இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் பொன்முடி சந்திப்பு.!

Published by
மணிகண்டன்

அமலாக்கத்துறை சோதனை மற்றும் விசாரணையை தொடர்ந்து இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் பொன்முடி சந்தித்து பேசியுள்ளார். 

நேற்று முன்தினம் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் திமுக எம்பியுமான கௌதம சிகாமணி தொடர்பான வீடு , அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். 2006- 2011 திமுக ஆட்சி காலத்தில் செம்மண் குவாரி ஒதுக்கீட்டில் அதிகளவு மண் எடுத்ததாகவும், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகார் தொடர்பாகவும் அமைச்சர் பொன்முடி மீது 2011 அதிமுக ஆட்சி காலத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்த வழக்குப்பதிவை மையமாக கொண்டு நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அதன் பின்னர் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் பொன்முடி அழைத்து செல்லப்பட்டு நேற்று அதிகாலை 3 மணி அளவில் தான் விசாரணை முடிந்து வீடு திரும்பினார்.மேலும்  நேற்று மலை 4 மணி அளவிலும் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் பொன்முடி விசாரணைக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று காலையிலேயே தனது வழக்கமான அலுவல் பணிகளை அமைச்சர் பொன்முடி ஆரம்பிப்பதற்கு முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்துள்ளார் அமைச்சர் பொன்முடி. அமலாக்கத்துறை சோதனைக்கு பின்னர் நடந்த இந்த சந்திப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

KKR vs GT : சொந்த மண்ணில் குஜராத்திடம் படுதோல்வி அடைந்த கொல்கத்தா!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…

4 hours ago

CSK குடும்பத்தில் சோகம்! கான்வே தந்தை உயிரிழப்பு!

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…

4 hours ago

KKR vs GT : கொல்கத்தாவை அலறவிட்ட குஜராத் கேப்டன் கில்! ஜஸ்ட் மிஸ்-ஆன செஞ்சுரி!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…

6 hours ago

“பந்தூர் மக்களே நம்பிக்கையோடு இருங்கள்!” தவெக தலைவர் விஜய் திடீர் பதிவு!

சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…

7 hours ago

அதிமுக – பாஜக கூட்டணி! “முதலமைச்சர் பதட்டப்படுகிறார்!” “அதிமுக யாரை ஏமாற்றுகிறது?”

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…

8 hours ago

“CSK இப்படி தடுமாறியதை நான் பார்த்ததே இல்லை! ” சுரேஷ் ரெய்னா வேதனை!

சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…

8 hours ago