அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் அமைச்சர் பொன்முடி!

Published by
பாலா கலியமூர்த்தி

கடந்த 2006 முதல் 2011 காலகட்டத்தில் கனிமவளத் துறை அமைச்சராக இருந்த அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.

இந்த பணத்தை வெளிநாட்டில் முதலீடு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில், அமைச்சர் பொன்முடியும் அவரின் மகன் கெளதம சிகாமணியும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.  இந்த சூழலில் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கடந்த ஜூலை மாதம் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம சிகாமணி ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அதன்படி, தமிழ்நாட்டில் சென்னை, விழுப்புரம் ஆகிய இடங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்றது. வங்கி அதிகாரிகள் அவரவழைத்து, அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினரின் வரவு, செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டு, தொடர் சோதனையில் ஈடுபட்டனர்.

மழை தீவிரம்.. 14 மாவட்ட ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த மாநில பேரிடர் மேலாண்மைத்துறை!

இதையடுத்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் 7 மணி நேரத்திற்கும் மேலாக அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நடத்தப்பட்டு, அதிகாலை 3 மணியளவில் அமைச்சர் பொன்முடி அங்கிருந்து அனுப்பப்பட்டார். இதனைத்தொடர்ந்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வரும் 30ம் தேதி (இன்று) விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில், தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவரது வழக்கறிஞருடன் சென்னையில் உள்ள  அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார். சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாத்துறையினரால் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜராகி உள்ளார்.

Recent Posts

LSG vs PBKS : தட்டுத்தடுமாறி டார்கெட் வைத்த லக்னோ! பஞ்சாப் ஜெயிக்க 172 ரன்கள் தேவை.!

லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…

19 minutes ago

LSG vs PBKS : லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு!

லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…

2 hours ago

வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…

சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…

3 hours ago

“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!

லக்னோ :  தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…

4 hours ago

வழக்கு தொடர்ந்த பாஜக நிர்வாகி.. ‘எம்புரான்’ படத்திற்கு தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு.!

கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…

4 hours ago

அப்போ தோனி., இப்போ ரோஹித்! பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துவிட்டது. அதில் வழக்கம் போல புதிய இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன்…

5 hours ago