நுங்கப்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று மீண்டும் ஆஜரானார் அமைச்சர் பொன்முடி.
அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் திமுக எம்பியுமான கெளதம சிகாமணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் சுமார் 19 மணி நேர சோதனைக்கு பிறகு நுங்கப்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர். அங்கு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் ஆகியோரிடம் தனித்தனியே சுமார் 7 மணிநேரம் விசாரணை நடத்தினர்.
இதன்பின், அதிகாலை 3 மணி அளவில் அமைச்சர் பொன்முடி திரும்பினார். அமைச்சர் பொன்முடியிடம் நேற்று விடிய விடிய விசாரணை நடத்தியிருந்தது அமலாக்கத்துறை. இருப்பினும், இன்று மாலை மீண்டும் நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
குவாரியில் அதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு ரூ.28 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக சம்மன் அனுப்பப்பட்டது. அமைச்சர் பொன்முடி, கெளதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதம சிகாமணி விசாரணைக்காக மீண்டும் ஆஜராகியுள்ளனர்.
நேற்று 19 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில் இன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, அமலாக்கத்துறை அலுவலகத்தில் மகன் கெளதம சிகாமணியுடன் ஆஜரானார் அமைச்சர் பொன்முடி. செம்மண் குவாரி வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் மகன் கெளதம சிகாமணி விசாரணை நடைபெற்று வருகிறது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…