அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

Published by
பாலா கலியமூர்த்தி

சொத்து குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிப்பதை எதிர்த்து, தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர்  பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வைந்து எடுத்து மறுவிசாரணைக்கு எடுத்தது. அதாவது, சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து வேலூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தாமாக முன்வந்து இவ்வழக்கை மறுவிசாரணைக்கு எடுத்தார்.

இவ்வழக்கு விசாரணையில், சொத்து குவிப்பு வழக்கில் மிக மோசமான முறையில் விசாரணை நடந்துள்ளது. இதன் காரணமாகவே வேலூர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளோம் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்திருந்தார். அமைச்சர் பொன்முடி மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற கோரி லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கை வைத்தது. ஆனால், வேறு நீதிபதிக்கு மாற்றும் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்தார்.

இந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிப்பதை எதிர்த்து, தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர்  பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இதனிடையே, கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக பொறுப்பில் இருந்த, தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.36 கோடி சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து இருந்தது.

இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், பின் வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அதன்படி, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது பதியப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கானது வேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் தீர்ப்பு வந்தது.

அதில், போதிய ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்யவில்லை, குற்றசாட்டுகள் நிரூபணம் செய்யவில்லை என கூறி, சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி, அவரது மனைவியை வேலூர் நீதிமன்றம் விடுதலை செய்திருந்தது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் வகையில், கடந்த ஆக.10ம் தேதி தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். இந்த நிலையில், தாமாக முன்வந்து எடுத்த வழக்கை வேறு நீதிபதி விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்த நிலையில், அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அதிரடி வரி போட்ட டொனால்ட் டிரம்ப்! “கண்டிப்பா பதிலடி இருக்கு”… கனடா, ஐரோப்பியா திட்டம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு வரி விதிப்பதாக அதற்கான பட்டியலை…

39 minutes ago

ஹிந்தி திரையுலகில் பெரும் சோகம்! நடிகரும் இயக்குநருமான மனோஜ் குமார் காலமானார்!

மும்பை : பிரபல இந்திய நடிகரும் இயக்குநருமான மனோஜ் குமார் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் தனது…

1 hour ago

அப்போ சரியா செஞ்சேன் இப்போ இல்லை…ஜாகீர் கானுடன் புலம்பிய ரோஹித் சர்மா!

லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களுடைய கவனம் முழுவதும் மும்பை வீரர்…

1 hour ago

வெளுத்து வாங்கும் கனமழை..இன்று இந்த 17 மாவட்டத்திற்கு அலர்ட்!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று…

2 hours ago

கடும் எதிர்ப்பு… மாநிலங்களவையிலும் நிறைவேறியது வக்பு சட்டத் திருத்த மசோதா!

புதுடெல்லி : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…

2 hours ago

லியோவை பார்க்கணுமா? பார்முக்கு திரும்பிய வெங்கடேஷ் ஐயர்..23.75 கோடி வேலை செய்யுது!

கொல்கத்தா : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி நிர்வாகம் வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக்கொண்டது. எனவே, அவருடைய…

2 hours ago