பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு தேதியை அறிவித்த அமைச்சர் பொன்முடி..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
2011-க்கு முன்பு படித்த கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வு ஜூன் 21-ம் தேதி முதல் நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இன்று தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன், காணொலி மூலம் கலந்துரையாடினார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 2011 ஆம் ஆண்டுக்கு முன்னர் படித்த கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வு ஜூன் 21-ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும் இன்று முதல் வரும் ஜூன் 3-ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தலாம் என அறிவித்துள்ளார். இது 2011-ஆம் ஆண்டுக்கு முன் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
மேலும், 2017 ரெகுலேஷன் மாணவர்களுக்கு முதுகலை, இளங்கலை படிப்புக்கு ஜூன் 14 ஆம் தேதி முதல் ஆன்லைனில் தேர்வு நடைபெறும் என்றும் . 2013 ரெகுலேஷன்படி படித்த யு.ஜி மாணவர்களுக்கு ஜூன் 14-ல் தேர்வுகள் தொடங்கும் என்றும், கடந்த முறை தேர்வு எழுதாமலும் , கட்டணம் செலுத்தாமலும் உள்ள மாணவர்கள் ஜூன் 3-க்குள் கட்டணம் செலுத்தலாம் என தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழகம் தவிர்த்த மற்ற அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கான பட்டத் தேர்வுகள், அரியர், இறுதித் தேர்வுகள் 15.06.2021 தொடங்கி 15.07.2021-க்குள் முடிவடையும். இதற்கான தேர்வு முடிவுகள் 30.07.2021-க்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)