பாஜக ஏஜெண்ட்டாக ஆளுநராக செயல்படுகிறார். அமித்ஷா உட்பட 33 மத்திய அமைச்சர்கள் மீது வழக்குகள் உள்ளது என அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து, அவர் தற்போது நீதிமன்ற காவலில் இருப்பதாலும், அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற உள்ள காரணத்தாலும் அவர் பொறுப்பு வகித்து வந்த மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆகிய துறைகள் வேறு அமைச்சர்களிடம் மாற்றி கொடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நடவடிக்கை மேற்கொண்டார்.
அதன்படி, மின்சாரத்துறையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் ஒதுக்கி, அதனை உறுதிப்படுத்த அதற்கான கோப்புகளை ஆளுநர் ரவிக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. ஆனால் அதில் பிழை உள்ளது என ஆளுநர் ரவி அந்த கோப்புகளை திருப்பி அனுப்பிவிட்டார். இதனை மீண்டும் திருத்தி தமிழக அரசு நேற்று மீண்டும் ஆளுநருக்கு அனுப்பியுள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த நடவடிக்கை குறித்து அமைச்சர் பொன்முடி நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசுகையில் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். அவர் கூறுகையில், ஆளுநர் பாஜக ஏஜென்ட் போல செயல்படுகிறார். என குற்றசாட்டை முன் வைத்தார்.
மேலும் கூறுகையில், கடந்த 31.05.2023 அன்றே ஆளுநர் ரவி, முதல்வருக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குகள் இருப்பதால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கோரியிருந்தார். அதற்கு பதில் கடிதம் எழுதிய, முதல்வர் மு.க.ஸ்டாலின், வழக்குகள் இருந்தால் பதவி விலக வேண்டும் என்றால், உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது வழக்கு நிலுவையில் இருபப்தால் அவர் நீக்கப்பட்டாரா.? தற்போது இருக்கிற 33 மத்திய அமைச்சர்கள் மீதும் வழக்குகள் உள்ளது. அவர்கள் நீக்கப்பட்டார்களா? இந்த கடித்தை ஆளுநர் முதலில் பாஜகவுக்கு தான் எழுத வேண்டும் எனவும் பதில் கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார்.
அடுத்ததாக கூறிய அமைச்சர், பாஜக முகவராக ஆளுநர் ரவி செயல்படுகிறார். இன்று (நேற்று) மதியம் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலமின்றி ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலையில் இருப்பதால், அவர் பொறுப்பு வகித்து வந்த 2 முக்கிய பொறுப்புகள் வேறு அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பாக கொடுக்கப்படுவதாக ஆளுநருக்கு தெரிவிக்கப்பட்டது. முதல்வர் யாரை அமைச்சர் என்று சொல்கிரார்களோ அவர்களை அமைச்சர்களோக நியமிக்க வேண்டிய வேலை தான் ஆளுநருடையது என கூறினார்.
ஆனால் ஆளுநர் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், நீங்கள் சொல்லும் காரணங்கள் எல்லாம் misleading and incorrect என எழுதுகிறார். உடனடியாக, அதனை சரிசெய்து மீண்டும் அதிகாரிகளை வைத்து ஆலோசனை நடத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆளுநருக்கு பதில் கடிதம்அனுப்பியுள்ளார் . இதனை ஏற்று கொள்வார் என நினைக்கிறோம் என அமைச்சர் பொன்முடி நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டு பேசினார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…