மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யும் தமிழக அரசின் நடவடிக்கையை பலரும் பாராட்டுவதாக அமைச்சர் பெரிய கருப்பன் குறிப்பிட்டார்.
கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகளை சந்தை படுத்தும் விதமாக புதிய செயலியை கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் அறிமுகம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் தக்காளி விற்பனை பற்றி கூறினார்
வெளிச்சந்தையில் தக்காளி விலையில் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் குறிப்பிட்ட ரேஷன் கடைகளில் தக்காளியை கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது. இது குறித்து அமைச்சர் பெரிய கருப்பன் கூறுகையில் தமிழக முதல்வரின் இந்த நடவடிக்கைகள் குறித்து பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
பிற மாநிலங்களிலும் காய்கறி விலை ஏற்றம் இருக்கிறது. இருந்தும் அம்மாநில முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தமிழக முதல்வரின் நடவடிக்கைகள் மிகவும் பாராட்டுகுறியது என பிற மாநிலத்தவர்கள் கூறுகிறார்கள் என அமைச்சர் பெரிய கருப்பன் கூறினார்.
மேலும், தற்போது பட்டியலிடப்பட்டுள்ள கடைகளுக்கு மட்டுமே தக்காளி மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் மற்ற மாவட்டங்களும் தக்காளி மலிவு விலையில் விற்கப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் குறிப்பிட்டார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…