டெல்டா கனமழை பாதிப்பு : 13 ஆயிரம் ஹெக்டேர் பயிர் சேதம்! ஆய்வுக்கு பின் அமைச்சர் பேட்டி!

கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர் பன்னீர்செல்வம், தமிழகத்தில் 13 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன என தெரிவித்தார் .  

Heavy rain Crop damage in Tamilnadu - Minister MRK Panneerselvam

தஞ்சை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகை முதல் சென்னை வரையிலான வடதமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும்,  டெல்டா மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆயிரக்கணாக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாய நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமனடைந்துள்ளன. இதற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பெரும்பாலான விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செலவம் மற்றும் கோ.வி.செழியன் ஆகியோர் பார்வையிட்டனர். பிறகு செய்தியாளர்களிடம் பயிர் சேதம் குறித்த தகவலை அளித்தனர்.

அப்போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், “வெள்ளம் காரணமாக பாதிப்பு ஏற்படவில்லை. அதிகனமழை காரணமாக பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. தமிழகம் முழுவதும் 13 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு அளவுக்கு பயிரடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.  தஞ்சையில் 947 ஹெக்டர் அளவில் பயிர்கள் சேதமடைந்துள்ளன.

கடலூரில் 500 ஹெக்டர் அளவில் பயிர் சேதமும்,  மயிலாடுதுறையில் 3300 ஹெக்டர் அளவில் பயிர் சேதம், நாகையில் 7600 ஹெக்டர் அளவில் பயிர் சேதம், ராமநாதபுரத்தில் 800 ஹெக்டேர் அளவில் பயிர்சேதம்,  திருவாரூரில் 958 ஹெக்டர் அளவில் பயிர்சேதம் முதற்கட்டமாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் நீரில் மூழ்கி 33%க்கும் மேல் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். அதற்கான கணக்கெடுப்பு பணிகளை வேளாண்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.” என அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்