வணிக நிறுவனங்கள் பெயர் பலகைகளில் தமிழ் இல்லையென்றால் தார் பூசி அழிக்க தயங்காது… அமைச்சர் மாஃப அதிரடி கருத்து

Default Image

தமிழ்நாட்டில் கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் பெயர் பலகைகளில் நிறுவனங்களின் பெயர்கள் கட்டாயம் தமிழில் இடம் பெற வேண்டும், தேவைப்பட்டால் ஆங்கிலம் பிறமொழிகள் பயன்படுத்த வேண்டும். தமிழ், ஆங்கிலத்தில் எழுதினால் 5:3 வீதத்திலும், தமிழ், ஆங்கிலம், பிறமொழி முறையே 5:3:2 என்ற வீதத்தில் இருத்தல் வேண்டும் என்பது விதி. ஆனால் அதை பெரும்பாலோனோர் பின்பற்றுவது இல்லை. இந்நிலையில். தாய்மொழித் திருநாளையொட்டி சென்னை தரமணியில் உலகத் தமிழராய்சி நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன்,  தமிழில் பெயர் சூட்டாத  நிறுவனங்களுக்கு அபாராதம் விதிக்கும் அதிகாரத்தை தமிழ் வளர்ச்சி துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.மேலும்,அவர்,  தமிழகத்தில் வணிக நிறுவனங்களின் பெயர்கள் தமிழில் இல்லாத நிலை உள்ளதாகவும் இத்தகைய நிலையை  தார்பூசி அழித்திடும் நடவடிக்கையில் இறங்கவும் தமிழ் வளர்ச்சித்துறை தயங்காது என்று காட்டமாக தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்