தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நாளை காலை 11.30 வெளியிடுகிறார்.
தி.மு.க தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்ற பின் நடைப்பெற்ற முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், ஆளுநர் உரையின் போது நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,தமிழக அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நாளை காலை 11.30 மணிக்கு தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடுகிறார்.
அதன்படி,பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெள்ளை அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடவுள்ளார்.அதிமுகவின் கடந்த 10 வருட ஆட்சிக்காலத்தில் அரசின் திட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகைகள் உட்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் இந்த வெள்ளை அறிக்கையில் இடம் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக ,கடந்த 2001 ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த சி.பொன்னையன்,நிதி நிலை வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளை அறிக்கை என்றால் என்ன?
வெள்ளை அறிக்கை என்பது ஒரு அரசாங்கமோ அல்லது ஒரு அமைப்போ ஒரு பிரச்சனைக்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகும். வெள்ளை அறிக்கை மூலம் வெளியிட்ட அமைப்பின் தெளிவான குறிக்கோளை மக்கள் அறிந்துகொண்டு, விவாதிக்கவோ, ஆலோசிக்கவோ முடியும். வெள்ளை அறிக்கை, ஒரு பிரச்சனைக்குத் தீர்வாக அல்லது புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய வெளியிடப்படுகிறது.
அதன்படி,நாளை வெளியிடப்படவுள்ள தமிழகத்தின் நிதி நிலைக்கான வெள்ளை அறிக்கையில் வரவு – செலவு கணக்குகள், கடன் அளவு, நிதி இருப்பு உள்ளிட்ட அனைத்தும் இடம்பெறும்.
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல்…
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…
லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…