இலங்கை தமிழர்களுக்கு 3,959 வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு – நிதியமைச்சர்
இலங்கை அகதிகளுக்கு வீடு கட்ட 223 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்ட தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-2024 க்கான பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.
நிதியமைச்சர் உரை :
இந்த உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி விவரங்கள் குறித்து விவரித்து வருகிறார். இதில், இலங்கை தமிழகர்களுக்கு வீடு கட்டுவதற்கும் நிதி ஒதுக்கப்பாட்டதை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தமிழர்கள் :
இலங்கையில் இருந்து தமிழகத்திக்கு அகதிகளாக வந்து நீண்ட வருடங்களாக தங்கி இருப்பவர்களுக்கு இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வீடுகட்டி கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் மீதமுள்ள 3,959 வீடுகள் கட்டுவதற்கு வரும் நிதியாண்டில் ரூ.223 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.