#Breaking:”பெட்ரோல்,டீசல் விலை குறைக்கப்படும்” – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாக்குறுதிப்படி பெட்ரோல்,டீசல் விலை குறைக்கப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக 16 வது சட்டப்பேரவையின் கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.முதல் நாளன்று ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கி பல்வேறு திட்டங்கள் பற்றி அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து,சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் இன்று நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில்,விவாதத்தின் போது பேசிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,”மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் ஒரு சதவிகிதத்தை கொரோனா 2 வது அலைக்காக செலவிட்டு வருகிறோம். எனவே, இப்போதைக்கு நிதி நிலையை கருத்தில் கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க முடியாது.
நிதிநிலை சீரானவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாக்குறுதிப்படி பெட்ரோல்,டீசல் விலை குறைக்கப்படும்.”,என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025