“பத்திரப்பதிவில் இதனை குறைத்தோ,அதிகரித்தோ காட்டினால் நடவடிக்கை;அபராதம் வசூல்” – அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை!

Default Image

தமிழ்நாடு அரசின் பதிவுத்துறை வரலாற்றில் இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் ரூ.12,700 கோடி அரசுக்கு நிதிவருவாய் கிடைக்கப்பெற்றுள்ளது என்றும்,பத்திரப்பதிவு மேற்கொள் பொதுமக்களும் அரசால் நிர்ணயக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பீட்டின்படி பதிவு மேற்கொள்ள வேண்டும் என்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

“தமிழ்நாடு அரசின் பதிவுத்துறை வரலாற்றில் இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் ரூ.12,700 கோடி அரசுக்கு நிதிவருவாய் கிடைக்கப்பெற்றுள்ளது.

அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் அரசுக்கு  செலுத்தவேண்டிய பதிவுக்கட்டணம் அனைத்தும் இணையவழி நடைமுறைகள் மூலமாக செலுத்தும் முழுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.

மேலும், சார்பதிவாளர்கள் அனைவரும் அரசால் நிர்ணயக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பீட்டின் படி பத்திரப்பதிவு மேற்கொள்ளவும் மற்றும் வழிகாட்டி மதிப்பீட்டினை குறைத்தோ அல்லது அதிகப்படுத்தியோ பத்திரப்பதிவு மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

அதேபோல் பத்திரப்பதிவு மேற்கொள் பொதுமக்களும் அரசால் நிர்ணயக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பீட்டின்படி பதிவு மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.மேலும் மதிப்பீட்டினை குறைத்து வழிகாட்டி பதிவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டால் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு இழப்பு வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்கள் பத்திரப்பதிவு மேற்கொள்ளும் போது சார்பதிவாளர் அலுவலகத்தில் எந்த அலுவலர்களுக்கோ அல்லது இடைத்தரகர்களுக்கோ கையூட்டு எதுவும் கொடுக்க வேண்டாம் என்றும், அவ்வாறு கையூட்டு கேட்கும் அலுவலர்கள் மீது பதிவுத்துறை தலைவர், அரசு செயலாளர் மற்றும் கட்டுபாட்டு அறைக்கோ தகவல் தெரிவிக்கலாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது”,எனக் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்