மத்திய அரசின் கவனத்திற்கு ஆன்லைன் கேம்மான PUBG செயலிக்கு தடை விதிப்பது குறித்து கொண்டு செல்லப்படும் என்று அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆன்லைன் கேம்களை விளையாடும் பழக்கமுடையவர்கள். அந்த வகையில் அனைவரையும் ஈர்த்துள்ள ஆன்லைன் கேம் PUBG. தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் பலர் இந்த கேம்மில் அடிமை ஆகியுள்ளனர். தூக்கமில்லாமல் விளையாடும் இந்த கேம்மினால் பலர் தற்கொலையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சீன செயலிகளான டிக்டாக் உட்பட 59ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த நிலையில் தற்போது ஆன்லைன் கேம்மான PUBG-யை தடை செய்வது குறித்து அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பேசியுள்ளார்.
சென்னையில் உள்ள திரு. வி. க. நகரில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்டவைகளை வழங்கியுள்ளார். அதனுடன் மத்திய அரசின் கவனத்திற்கு ஆன்லைன் கேம்மான PUBG-யை தடை செய்வது குறித்து கொண்டு செல்லப்படும் என்று கூறிய அவர் இலவச இ-பாஸ் வழங்குவதில் முறைகேடு செய்யும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நடமாடும் காய்ச்சல் முகாம்களின் மூலம் தென் மாவட்டங்களில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…