பொதுமக்களை போல ஊடரங்கு உத்தரவை பின்பற்றிய அமைச்சர் விஜயபாஸ்கர்!
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருவதால், இந்தியா முழுவதும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் ஊரடங்கை பின்பற்றுவோம் என பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார். இதனால் தமிழகத்தில் பேருந்துகள், ரயில் சேவை, வணிக வளாகம், சிறிய மளிகை கடை முதல் பெரிய கடைகள் இயங்கவில்லை. மேலும், மக்கள் பலரும் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை.
இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கர், மக்கள் வீட்டிலேயே இருந்ததற்கு நன்றி என கூறினார். இதுகுறித்து அவரின் ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்த பதிவில், காலை வணக்கம். மக்கள் அனைவரும் வீட்டுக்குள் தங்கியதற்கு நன்றி. நாம் ஒன்றிணைந்து இந்த வைரஸ் பரவுவதின் சங்கிலியை உடைப்போம் . இனிய ஞாயிறு வாழ்த்துக்கள் எனவும்,நம்மைநாமே பார்த்துக்கொள்வோம் எனவும் தெரிவித்தார்.
#JanataCurfew: Good morning. Thank you for staying indoors. Let’s together break the chain of virus transmission. Have a happy Sunday! Let’s take care of each other.#TN_Together_AgainstCorona @MoHFW_INDIA #Vijayabaskar #CVB pic.twitter.com/J48P0R484C
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 22, 2020
மேலும் அவர், மற்றவர்களை போலவே தானும் வீட்டிலிருந்தே வேலைபார்ப்பதாக கூறினார். இதுகுறித்து அவர் அவரின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் ,அவர் மூத்த அதிகாரிகளுடன் நானும் வீட்டில் வேலைபார்க்கிறேன் என தெரிவித்தார்.
#JanataCurfew: Am working from home, technology comes handy, videoconference with Senior health officials on status updates & providing guidance. All is good!! #TN_Together_AgainstCorona @MoHFW_INDIA #Vijayabhaskar #CVB pic.twitter.com/8YFP79x7lA
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 22, 2020
இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் நாளை காலை 5 மணி வரை ஊடரங்கு உத்தரவு நீடிக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.