அமைச்சர் உதயநிதிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் வசம் இருந்த பல்வேறு துறைகள் ஒதுக்கீடு.
சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றார். இவருக்கு ஆளுநர் ஆர்என் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். உதயநிதிக்கு அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் உதயநிதி அறையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில், சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தனது அறையில் இளைஞர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின்.
அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கோப்புகளில் கையெழுத்திட்டார் உதயநிதி ஸ்டாலின். இதனிடையே, தமிழக அமைச்சரவையில் 10 அமைச்சர்கள் துறைகளில் மாற்றம் செய்யப்பட்டு, 11வது அமைச்சராக உதயநிதிக்கு முதலமைச்சர் வசம் இருந்த பல்வேறு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில், அமைச்சர் உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அமைச்சர் உதயநிதிக்கு வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…