அமைச்சர் ஓ. எஸ். மணியன் அவர்களின் மனைவி கலைச்செல்வி மரணமடைந்ததை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார் .
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரான ஓ. எஸ். மணியன் அவர்களின் மனைவி கலைச்செல்வி, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கலைச்செல்விக்கு நேற்று திடீரென நெஞ்சு வலியால் அவதிப்பட சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதனையடுத்து அவரது உடல் சொந்த ஊரான நாகப்பட்டினத்தில் உள்ள வேதாரண்யமிற்கு எடுத்து செல்லப்பட்டு இறுதி சடங்கு நடைபெற்றது. பல அரசியல் பிரமுகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில்,நாகை மாவட்ட கழக செயலாளரும், மாண்புமிகு அமைச்சருமான ஓ.எஸ். மணியன் அவர்களின் மனைவி திருமதி. கலைச்செல்வி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து வேதனையுற்றேன். துணைவியாரை இழந்து வாடும் மாண்புமிகு அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : மக்களவைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யத்திற்கு (மநீம), ஒரு மாநிலங்களவை உறுப்பினர்…
பெங்களூரு : இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) ஐபிஎல் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் யார் என்று அறிவிக்கப்படுவார்…
டெல்லி : இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சமீபத்தில் இந்தியாவை நாங்கள் வீழ்த்துவோம் என சவால் விடும் வகையில் பேசியது சர்ச்சையாக…
சென்னை : அதிமுகவிற்குள் தற்போது என்ன நடக்கிறது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே…
பெங்களூர் : இந்த ஆண்டுக்கான (2025) ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 21-ஆம் தேதி முதல் மே 25 வரை நடைபெறவுள்ளது.…
ரஷ்யா-உக்ரைன் போர் என்பது தொடர்ச்சியாக நடந்து வருவதால் இன்னும் அங்கு ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவு வருகிறது. அமெரிக்க அதிபராக…