மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சந்திப்பு
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது நகர்ப்புறம், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கவேண்டிய ரூ.2,029 கோடி நிதியை வழங்கவும், இயந்திர உற்பத்தி பொருட்களின் ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைக்கவும் அமைச்சர் வேலுமணி கோரிக்கை விடுத்தார்.