பெரம்பலூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட முனைவர் சோ.சத்திய சீலன் (88), கடந்த சில ஆண்டுகளாக திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சேதுராமன் பிள்ளை காலனியில் வசித்து வந்தார்.
இந்நிலையில்,அவர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு தனது வீட்டில் காலமானார்.இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து,சத்திய சீலன் அவர்களது மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் மொழிப் பற்றாளர்கள் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில்,அவரது மறைவிற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது :
“பேராசிரியர் சோ.சத்தியசீலன் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். மனிதனின் வாழ்வில் குருவின் மகிமையை எடுத்து சொல்லுகையில் அருணகிரிநாதரின் “குருவாய் வருவாய் அருள்வாய் குகனே” வரியை விளக்கியது மனதில் பதிந்துள்ளது. அவரின் குடும்பத்தாருக்கு என் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்”,என்று பதிவிட்டுள்ளார்.
முனைவர் சத்தியசீலன் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.இலக்கியத் திறனுக்காக ‘கலைமாமணி’, ‘சொல்லின் செல்வர்’ போன்ற விருதுகளை இவர் பெற்றுள்ளார். மேலும், குன்றக்குடி அடிகளாரால் நாவுக்கரசர் என்ற பட்டமும் பெற்றவர்.
பள்ளி ஆசிரியர், கல்லூரி பேராசிரியர், கல்லூரி முதல்வர் ஆகிய பதவிகளையும் சோ.சத்தியசீலன் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான டெல்லி கணேஷ் வயது மூப்பின் காரணமாக நேற்று இரவு காலமானார். அன்னாரது…
சென்னை : உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த முத்த நடிகர் டெல்லி கணேஷின் (80) மறைவு பெரும்…
சென்னை : அரசு முறைப் பயணமாக 2 நாள் சுற்றுப் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகரில் கள ஆய்வை நேற்று…
விருதுநகர் : எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டு இருந்த அறிக்கையில், அத்தியாவசியமற்ற செலவுகளை…
சென்னை : நடிகர் டெல்லி கணேஷின் மறைவு திரைத்துறையில் பெரும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்,சமூக வலைதளைத்தில் திரைத்துறை…
விருதுநகர் : குமாரசாமி ராஜா அலுவலகத்தில் ரூ.77.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து…