நிர்மலா தேவிக்கு அமைச்சர் கொலை மிரட்டல் ! வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு

நிர்மலா தேவியை அமைச்சர் ஒருவர் மிரட்டுகிறார் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மாணவியை தவறாக வழிநடத்துவதாக கைது செய்யப்பட்டார் பேராசிரியை நிர்மலாதேவி.பின் பதினொரு மாத விசாரணைக்கு பின்னர் ஜாமினில் வெளிவந்தார்.சிபிசிஐடி இந்த வழக்கை ஏற்று விசாரணை நடத்தி வந்தது.பின்னர் இது தொடர்பான வழக்கில் நிர்மலா தேவி ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை.எனவே இதனால் ஜாமீனை ரத்து செய்து நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இதனையடுத்து இன்று சிபிசிஐடி போலீசார் நிர்மலா தேவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.அப்போது நிர்மலா தேவியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனை தொடர்ந்து நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நிர்மலா தேவியை அமைச்சர் ஒருவர் மிரட்டுகிறார். ஒரு கடத்தல்காரரை ஆஜர்படுத்துவது போல் நிர்மலா தேவியை ஆஜர்படுத்துகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!
April 25, 2025
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025