அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கூறியிருந்த நிலையில் அதற்கு ஒருவரை தவிர 12 பேர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யபட்டார். இந்த கொலை குற்றவாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருக்கின்றனர். சிறப்பு புலனாய்வு துறையினர் இந்த கொலை வழக்கை விசாரித்து வருகின்றனர். திருச்சி நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
கடந்த 1ஆம் தேதி திருச்சி சிறப்பு நீதிமன்றத்தில் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், நவம்பர் 7ஆம் தேதி விசாரணையில் உத்தரவிட்டது போல, கடந்த 14ஆம் தேதி குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்ட 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது.
மோகன்ராம், தினேஷ், கணேசன், சத்யராஜ், கலைவாணன், மாரிமுத்து, திலீப் எனும் லட்சுமிநாராயணன் , ராஜ்குமார், சுரேந்தர், சண்முகம், சிவா கடலூர், சிறையில் இருக்கும் செந்தில் ஆகிய 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.
இதில் 9 பேர் நேரில் கடந்த ஆஜராகி விட்டனர். அதில் 8 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல் அளித்துவிட்டனர். ஆனால், தங்கள் மருத்துவர் மற்றும் தங்களது வழக்கறிஞர் இந்த சோதனையின் போது இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
அந்த 9 பேரில் தென்கோவன் எனும் சண்முகம் மட்டும் ஏற்கனவே தான் போலீசார் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து விட்டதாகவும், அதனால் இந்த உண்மை கண்டறியும் சோதனையில் கலந்துகொள்ள மறுப்பு தெரிவித்து இருந்தார்.
அன்று நேரில் ஆஜராகாமல் இருந்த மோகன், கணேசன், தினேஷ் , செந்தில் ஆகியோர் இன்று நேரில் ஆஜராகி உள்ளனர். இவர்கள் 4 பேரும் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்து உள்ளனர். சிறப்பு புலனாய்வு துறை கேட்டிருந்த 13 பேரில், 12 நபர்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்து உள்ளனர்.
இவர்களிடம் சென்னையில் வைத்து உண்மை கண்டறியும் சோதனை நடத்த ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது. விரைவில் இவர்களிடம் சோதனை நடைபெற்று வாக்குமூலம் பெறப்படும். தென்கோவன் எனும் சண்முகம் மட்டும் இந்த சோதனைக்கு மறுப்பு தெரிவித்து உள்ளார்.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…
பெங்களூர் : தீபாவளி இரவில் நடந்த துயர சம்பவத்தில் 32 வயது சபரீஷ் என்ற நபர் உயிரிழந்தார். இவருடைய இறப்புக்குக்…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜின், LCU-விற்கெனவே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. கூலி படத்திற்கு அடுத்தபடியாக,…
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…