பால் கொள்முதல் விலை விவகாரம்.! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் நாசர் ஆலோசனை.!
பால் கொள்முதல் விலை உயர்வு கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆலோசனை செய்து வருகிறார்.
தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தினர் பால் விலையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
முதல்வருடன் ஆலோசனை :
இதனை அடுத்து, கூட்டுறவு சங்கத்தினர் உடன் பால்வளத்துறை அமைச்சர் நாசர் பேசுவரத்தை நடத்தினார். இதனை தொடர்ந்து, தற்போது தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர் நாசர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
கொள்முதல் விலை :
அதில், பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரிய கூட்டுறவு சங்கங்களின் கோரிக்கை பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக பசும்பால் விலையை 42 எனவும், எருமை பால் கொள்முதல் விலையை 51 எனவும் உயர்த்த கோரி கூட்டுறவு சங்கத்தினர் கோரிக்கை வைத்து இருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.