ஆவின் பால் கார்டு வைத்திருக்கும் பொது மக்களுக்கு ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் அதே 48 ரூபாய் தான் எனவும், வியாபார நோக்கத்திற்காக வாங்குபவர்களுக்கு மட்டுமே பால் லிட்டருக்கு 60 ருபாய் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
ஆவின் பால் நிறுவனத்தில் வியாபார நோக்கத்திற்கு விநியோகிக்கப்படும் ஆரஞ்சு நிற பால் லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. லிட்டர் 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக உயர்த்தப்பட்டு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்த விலையேற்றம் குறித்து தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், ‘ வியாபார நோக்கத்தில் விநியோகிக்கப்படும் பால் பாக்கெட்டான ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலை மட்டுமே ஏற்றப்பட்டுள்ளது. ‘ என தெரிவித்தார்.
அதுவும், பால் கார்டு வைத்திருக்கும் பொதுமக்களுக்கு அதே 48 ரூபாய் தான். என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், மற்ற தனியார் நிறுவனங்கள் 70 ரூபாய்க்கு விற்று வருகின்றனர். தமிழக அரசு அதைவிட 10 ரூபாய் குறைவாக தான் விற்று வருகிறது என தெரிவித்தார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…