தமிழக வேளாண் துறையின் சாதனைகள்.., அமைச்சர் கூறிய நீண்ட பட்டியல்….
5வது முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடந்த 4 ஆண்டுகளில வேளாண் துறையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பேரவையில் எடுத்துரைத்தார்.

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து இன்று தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார். வேளாண் பட்ஜெட்டை 5வது முறையாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்கிறார்.
இந்த பட்ஜெட் உரையின் போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட திமுக அமைச்சர்கள் , எம்எல்ஏக்கள் என அனைவரும் பச்சை துண்டு அணிந்து இருந்தனர். இந்த பட்ஜெட் உரையின் தொடக்கத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்கடந்த 4 ஆண்டுகால சாதனைகளை பட்டியலிட்டார். அதில்,
- 2019 – 2020 வரையில் 146.77 லட்சம் ஏக்கராக இருந்த வேளாண் நிலங்கள் 2023 – 2024 காலகட்டத்தில் 151 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.
- பல்வேறு வேளாண் வளர்ச்சி திட்டங்களால் பயிர் உற்பத்தி மற்றும் கேழ்வரகு உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
- மக்காச்சோளம், எண்ணெய் வித்துக்கள், கரும்பு ஆகியவை உற்பத்தியில் தமிழ்நாடு 2ஆம் இடத்தில் உள்ளது.
- நிலக்கடலை, குறுந்தானியம் ஆகியவை உற்பத்தியில் தமிழ்நாடு 3வது இடத்திலும் உள்ளது.
- 2022 – 2023-இல் 346.38 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
- நீர்பானசத்தை அதிகப்படுத்த விவசாயிகளுக்கு புதிய பாசன மின் இணைப்புகளை அரசு ஏற்படுத்தியுள்ளது. 2021 – 2022 காலகட்டத்தில் 1.81 லட்சம் பாசன மின் இணைப்புகள் வழங்ப்பட்டுள்ளது.
- வேளாண் துறையில்இயந்திரங்கள் இன்றியமையாதது என்பதால் கடந்த 4 ஆண்டுகளில் 55 ஆயிரம் விவசாயிகள் பயண்பெரும் வகையில், 1109 இயந்திர வாடகை மையங்கள், 308 கருப்பு அறுவடை இயந்திரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக ரூ.510 கோடி செலவில் நிதி ஒதுக்கீடு செய்ப்பட்டுள்ளது.
- அறுவடைக்கு பிறகு லாபம் ஈட்டிட ரூ.488 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள், சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன.
- 2021 – 2022ஆம் ஆண்டு முதல் வேளாண் முதல் பட்டதாரிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களை வேளாண் தொழில் முனைவோராக்கும் திட்டத்தில் 435 இளைஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியஉதவி அளிக்கப்பட்டு பல இளைஞர்களை தொழில் முனைவோர்களாக மாற்றியுள்ளோம்.
- 10,187 கிராம ஊராட்சிகளை ஒன்றிணைத்து 46 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் விவசாய பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
- வேளாண் துறையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பயன்பெறும் வகையில் ரூ.66.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்ப்பட்டுள்ளது. இதில் 15,800 பேர் பலன் பெற்றுள்ளனர்.
- நுண்ணுயிர் பாசனம் மூலம் டெல்டா மாவட்டத்தில் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால் தூர்வாரியதால் நிலத்தடி நீர் மட்டம் செறிவூட்டப்பட்டது.
- 89 லட்சம் ஏக்கராக இருந்த கரும்பு உற்பத்தி ஏக்கர், 2023 – 2024 காலகட்டத்தில் 94.68 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. 4 ஆண்டுகளில் இதுவரை கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.848 கோடி வழங்கப்பட்டுள்ளது.
- இயற்கை பேரிடர்களால் ஏற்பட்ட பயிர் சேதங்களை தவிர்க்க தோட்டக்கலை நிவாரணமாக ரூ.1,631.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 20.84 லட்சம் உழவர்களு வழங்கபட்டுள்ளது. ரூ.5,242 கோடி ரூபாய் உழவர்களுக்கு நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய ஆட்சி காலத்தில் வேளாண் துறையில் ஏற்படுத்தப்பட்ட சாதனைகளை 13.3.2025 அன்று வெளியிடப்பட்ட தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
எப்படி கண்ணா இது? சிம்பு குறித்து பேசிய ரஜினிகாந்த்!
March 15, 2025