பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஒரே நாளில் 187 டன் பிளாஸ்டிக்கை அதிகாரிகள் உதவியுடன் கைப்பற்றி மறுசுழற்சிக்கு அனுப்பிவைத்தார். என அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்தும் பண்டிகை கால பிளாஸ்டிக் பயன்பாடு குறித்தும் பேசினார்.
அதில், கடந்த 2019 தொடக்கத்தில் 14 வகை பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாநில அரசு தடை விதித்தது. அதே போல, மத்திய அரசும் ஜூலை 2022இல் குறிப்பிட்ட வகை பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்தது. தமிழக அரசும் மீண்டும் மஞ்சப்பை எனும் திட்டம் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து வருகிறது.
இருந்தும் இந்த தீபாவளி பண்டிகையை ஒட்டி பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது வேதனை அளிக்கிறது. பொதுவிழாக்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை மக்கள் குறைக்க வேண்டும். எது எல்லா உயிரினத்திற்கும் பேராபத்து என குறிப்பிட்டு அமைச்சர் பேசினார்.
மேலும் கூறுகையில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஒரே நாளில் 187 டன் பிளாஸ்டிக்கை அதிகாரிகள் உதவியுடன் கைப்பற்றி மறுசுழற்சிக்கு அனுப்பிவைத்தார். அதே போல மற்ற மாவட்டத்திலும் முன்னெடுக்க வேண்டும் ‘ என பிளாஸ்டிக் பயன்பாடு குறித்தும், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை குறித்தும் பேசினார் அமைச்சர் மெய்யநாதன்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…