பாஜகவினர் புளுகுமூட்டைகள்.! அமைச்சர் மனோ தங்கராஜ் கடும் விமர்சனம்.!
வெட்டி ஒட்டி சித்தரித்து பொய்யான ஒரு வீடியோவை பாஜகவினர் பரப்புகின்றனர். உண்மையாகவே புழுகுமூட்டைகள் தான். – அமைச்சர் மனோ தங்கராஜ் டிவீட்.
திமுக பேச்சாளர் சைதை சாதிக் அண்மையில் ஒரு திமுக கூட்டத்தில் பேசுகையில் குஷ்பூ, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோர் பற்றி சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு இருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
இது குறித்து பாஜக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த திமுக கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ் மேடையில் சிறித்து கொண்டு இருந்ததாகவும், அவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக பிரமுகர் நடிகை குஷ்பூ பேசியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, அமைச்சர் மனோ தங்கராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ வருந்ததக்க வகையில் ஒருவர் மேடையில் பேசிய போது நான் சிரித்து கொண்டு இருந்ததாக வெட்டி ஒட்டி சித்தரித்து பொய்யான ஒரு வீடியோவை பாஜகவினர் பரப்புகின்றனர்.’ என குற்றம் சாட்டி இருந்தார்.
மேலும், ‘ இதில் வியப்பு ஏதும் இல்லை. இந்த விஷயத்தில் கூட வெட்டி ஒட்டி பேசும் பாஜகவினர் உண்மையாகவே புழுகுமூட்டைகள் தான்.’ என விமர்சித்து உள்ளார் அமைச்சர் மனோ தங்கராஜ்.