minister mano thangarak warn [ file image]
கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. வரலாறு காணாத மழை பெய்ததால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சென்னையில், ஒரு சில இடங்களில் மழைநீர் வடிந்த நிலையில், பல இடங்களில் மழைநீர் இன்னும் வடியவில்லை என கூறப்படுகிறது.
இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கு மக்கள் தவித்து வருகின்றனர். மழைநீர் வெளியேற்றும் பணி, மீட்பு பணி, நிவாரணம் உள்ளிட்ட பணிகளில் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, மழையை பயன்படுத்தி பால் விலையை உயர்த்தி விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை மழை வெள்ள பாதிப்பு – நிவாரண பொருட்களை வழங்கிய முதல்வர்..!
இதுதொடர்பாக அமைச்சர் கூறியதாவது, நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மழையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இக்கட்டான சூழலில் விற்பனையாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், பதற்றப்படைந்த அன்றாட தேவையை விட அதிக பால் வாங்கி மக்கள் இருப்பு வைக்க வேண்டும் என்றார்.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆவின் பால் விற்பனையகங்களில் நிலைமை சீராகி வருகிறது. கூடுதல் விலைக்கு பால் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில், அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரு லிட்டர் பால் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். எனவே, ஆவின், தனியார் பாலை கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்தார்.
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…