கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை!

Aavin milk

கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. வரலாறு காணாத மழை பெய்ததால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சென்னையில், ஒரு சில இடங்களில் மழைநீர் வடிந்த நிலையில், பல இடங்களில் மழைநீர் இன்னும் வடியவில்லை என கூறப்படுகிறது.

இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கு மக்கள் தவித்து வருகின்றனர்.  மழைநீர் வெளியேற்றும் பணி, மீட்பு பணி, நிவாரணம் உள்ளிட்ட பணிகளில் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, மழையை பயன்படுத்தி பால் விலையை உயர்த்தி விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை மழை வெள்ள பாதிப்பு – நிவாரண பொருட்களை வழங்கிய முதல்வர்..!

இதுதொடர்பாக அமைச்சர் கூறியதாவது, நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மழையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இக்கட்டான சூழலில் விற்பனையாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், பதற்றப்படைந்த அன்றாட தேவையை விட அதிக பால் வாங்கி மக்கள் இருப்பு வைக்க வேண்டும் என்றார்.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆவின் பால் விற்பனையகங்களில் நிலைமை சீராகி வருகிறது.  கூடுதல் விலைக்கு பால் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில், அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரு லிட்டர் பால் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். எனவே, ஆவின், தனியார் பாலை கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்