பிணத்தை உண்டு வாழும் புழுவை விட மோசமானவர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள் என அனிதா சகோதரர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
2017-ம் ஆண்டு நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று பின்னர் நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் அனிதா தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு முறை அனிதா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தையே துயரத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், அதிமுகவிற்கு அனிதா ஆதரவு தெரிவிப்பது போல வீடியோ ஒன்றை உருவாக்கி அதை தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வெளியிட்டு இருந்தார்.
அந்த வீடியோவில் அனிதா, வருடத்திற்கு 427 ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்கிறார்கள். இந்த வாய்ப்பு ஜெயலலிதா ஆட்சி தந்திருக்கு. 17 பேரின் வாழ்க்கையை நாசமாக்கின திமுகவை மன்னிச்சிடாதீங்க. உங்கள் கையில் உள்ள விரல் மை எங்கள் வாழ்க்கை மறந்துறாதீங்க, திமுகவை மன்னிச்சிடாதீங்க என பேசுவது போல எடிட் செய்யப்பட்டு இருந்தது. இந்த வீடியோவை பார்த்த அனிதா குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அனிதாவின் சகோதரர் மணிரத்னம் கண்டனம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார். அதில், உங்கள் கட்சி தலைவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிணத்தை உருவமாக செய்து ஒட்டு கேட்ட அரசியல்வாதி தானே நீங்கள், உங்களிடம் வேற என்ன எதிர்பார்க்க முடியும். இந்த வீடியோவை பார்த்த பிறகு பிணத்தை உண்டு வாழும் புழுவை விட மோசமானவர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள் என தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவிற்கு பலர் கண்டனம் தெரிவித்த நிலையில், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வீடியோவை தனது ட்விட்டரில் இருந்து நீக்கியுள்ளார்.
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…
சென்னை : நேற்று மத்திய அரசு கல்வி உரிமை சட்டத்தில் (RTE) ஒரு முக்கிய திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி,…
சென்னை : வழக்கமாகவே படங்களில் வரும் காட்சிகளை மட்டும் பிரமாண்டமாக எடுக்காமல் படத்தில் இடம்பெறும் பாடல்களையும் பிரமாண்டமாக எடுப்பவர் தான் பிரம்மாண்டத்திற்கு…
சென்னை : மறைத்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு நாள் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து,…