பருவகாய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுதுவம் வாரந்தோறும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 7 வாரங்கள் இந்த மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. மொத்தம் 16,516 முகாம்கள் நடைபெற்றுள்ளன. 7,83,443 பேர் பயன்பெற்றுள்ளனர். 3772 பேருக்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று 3000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன . இன்று சென்னை வேளச்சேரி பகுதியில் நடைபெற மருத்துவ முகாமில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு துவங்கி வைத்தனர்.
நாளை முதல் ரூ.6000 விநியோகம்..! யாருக்கெல்லாம் கிடைக்கும்..?
அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்தும், அண்டை மாநில கொரோனா பாதிப்பு பற்றியும் தமிழக அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றியும் பேசினார். அவர் கூறுகையில், தமிழகத்தில் இதுவரை 3 வகையான கொரோனா தடுப்பூசிகள் 98 சதவீத் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.
தற்போது வரும் கொரோனா என்பது உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது, கொரோனா வைரஸானது, ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், ஓமிக்ரான், ஓமிக்ரானில் 20 – 30 வகை தொற்று என பல்வேறு வகைகளில் உருமாற்றம் ஆகிவருகிறது. சிங்கப்பூரில் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஆலோசித்தோம். கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 3,4 நாட்களில் தொற்று குணமாகி விடுகிறதாம். இந்த தொற்று காரணமாக சளி, இருமல் மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது.
கேரளாவில் 280பேருக்கு நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சரிடமும் இது குறித்து பேசினோம். தற்போது தொற்றின் பாதிப்பு மிதமானதாக தான் இருக்கிறது. தற்போது தமிழகத்தில் ஆர்டிபிசிஆர் (RT-PCR) சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. ஒற்றை இலக்கத்தில் தான் தொற்று பதிவாகி வருகிறது. என மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…