தமிழகத்தில் கொரோனா பாதிப்பு… அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்.!

Minister Ma Subramanian say About Covid 19 spread in Tamilnadu

பருவகாய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுதுவம் வாரந்தோறும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 7 வாரங்கள் இந்த மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. மொத்தம் 16,516 முகாம்கள் நடைபெற்றுள்ளன.  7,83,443 பேர் பயன்பெற்றுள்ளனர். 3772 பேருக்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று 3000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன . இன்று சென்னை வேளச்சேரி பகுதியில் நடைபெற மருத்துவ முகாமில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு துவங்கி வைத்தனர்.

நாளை முதல் ரூ.6000 விநியோகம்..! யாருக்கெல்லாம் கிடைக்கும்..?

அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்தும், அண்டை மாநில கொரோனா பாதிப்பு பற்றியும் தமிழக அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றியும் பேசினார். அவர் கூறுகையில், தமிழகத்தில் இதுவரை 3 வகையான கொரோனா தடுப்பூசிகள் 98 சதவீத் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.

தற்போது வரும் கொரோனா என்பது உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது, கொரோனா வைரஸானது, ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ்,  ஓமிக்ரான், ஓமிக்ரானில் 20 – 30 வகை தொற்று என பல்வேறு வகைகளில் உருமாற்றம் ஆகிவருகிறது. சிங்கப்பூரில் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஆலோசித்தோம். கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 3,4 நாட்களில் தொற்று குணமாகி விடுகிறதாம்.  இந்த தொற்று காரணமாக சளி, இருமல் மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது.

கேரளாவில் 280பேருக்கு நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சரிடமும் இது குறித்து பேசினோம்.  தற்போது தொற்றின் பாதிப்பு மிதமானதாக தான் இருக்கிறது. தற்போது தமிழகத்தில் ஆர்டிபிசிஆர் (RT-PCR)  சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. ஒற்றை இலக்கத்தில் தான் தொற்று பதிவாகி வருகிறது.  என மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்