உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை – திட்டம் இன்று தொடக்கம்!

Published by
Edison

உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மத்திய அரசின் ஆபரேசன் கங்கா திட்டத்தின் மூலம்,உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அண்டை நாடுகள் வழியாக மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.அந்த வகையில்,இதுவரை 17,400 பேர் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

எனினும்,உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.அந்த வகையில்,வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையத்திற்கு ரூ 3.5 கோடி ஒதுக்கீடு செய்து ஏற்கனவே தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,உக்ரைனிலிருந்து நாடு திரும்பியுள்ள மருத்துவ மாணவர்கள், இந்தியாவிலேயே தங்களது படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில்,உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தொடங்கி வைக்கிறார்.

104 என்ற கட்டணமில்லா அழைப்பு மூலம் ஆலோசனை தரும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைக்கிறார். அதன்படி, உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய  மாணவர்கள் ‘104 என்ற கட்டணமில்லா அழைப்பு’ மூலம் மனநல ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Recent Posts

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!  

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

4 mins ago

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

27 mins ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

48 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

50 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

2 hours ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

2 hours ago