21 கிமீ மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

Default Image

சென்னையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 129 வது மெய்நிகர் திரை மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்து அப்போட்டியில் பங்கேற்றார்.

அதிகாலை 4.30 மணியளவில் தனது இல்லத்தில் இருந்து போட்டியில் பங்கேற்ற அமைச்சர் 21 கிமீ தொலைவுக்கு நீண்ட மாரத்தானை,மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி நினைவு இடத்தில் நிறைவு செய்தார்.இந்த போட்டியில் அவருடன் காவல்துறையினர்,பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர்,செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது:

“கொரோனா பெருந்தொற்று பிறகு 10 நாட்கள் கழித்து உடற்பயிற்சிக்கான விழிப்புணர்வு என்ற வகையில் தினமும் 10 கிமீ ஓடிக்கொண்டிருக்கிறேன். எங்கே இருந்தாலும் ஓடும் பழக்கத்தை தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த பெருந்தொற்று காலத்தில் அரசுப் பணி கூடுதலாக மேற்கொள்ள வேண்டியிருந்ததால் கடந்த இரண்டு மாத காலமாக எந்தவிதமான பயிற்சியும் செய்யாமல் இருந்தேன்.தற்போது கடந்த 10 நாட்களாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.அதனால்,இந்த மாரத்தான் போட்டியில் 21 கிமீ ஓடியது சாத்தியமானது.

முன்னதாக திமுக ஆட்சியில் விளையாட்டு பயிற்சிகளுக்கான விழிப்புணர்வு,மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டது.ஆனால்,கடந்த ஆட்சியில் அதில் கவனம் செலுத்த தவறவிட்டனர்.எனினும்,தற்போது இளைஞர்கள்மேல் அக்கறை கொண்டுள்ள அரசு வந்திருப்பதால், எதிர்காலங்களில் இதுபோன்ற விளையாட்டுகளுக்கு தமிழகத்தில் முக்கியத்துவம் இருக்கும்”,என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்