பிரசவத்தில் குழந்தை இறப்பு.! மருத்துவர் இல்லாததால் விபரீதம்.! தமிழக அமைச்சர் கடும் நடவடிக்கை.!
பணி நேரத்தில் மருத்துவர் இல்லாத காரணத்தால் பிரசவத்தின் போது, குழந்தை இறந்துள்ளது. இது தொடர்பாக, மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், சூனம்பேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிரசவத்தின் போது குழந்தை இறந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சூனாம்பேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஒரு பெண் தன் பிரசவத்திற்காக வந்துள்ளார். ஆனால் அந்த நேரம், பிரசவம் பார்க்க மருத்துவர் இல்லாத காரணத்தால், செவிலியர் பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.
இதனால் பிரசவத்தில் உரிய சிகிச்சை இல்லாமல் குழந்தை இறந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியது. இதனை தொடர்ந்து, மருத்துவதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன்படி , செவிலியர் மற்றும் மருத்துவர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பணி நேரத்தில் மருத்துவர் இல்லாத காரணத்தால் மருத்துவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார் அமைச்சர் மா.சுப்ரமணியன்.