விஜயகாந்த் உடல்நிலை எப்படி உள்ளது..? அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன தகவல்..!

vijayakanth

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் கடந்த நவம்பர் 18ம் தேதி மார்புச் சளி, இடைவிடாத இருமல் காரணமாக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக சென்றுள்ளதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக வெளியான தகவல் பொய்யானது, இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என தேமுதிக தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனை அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது. அதில், விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை. அவருக்கு மேலும் சிகிச்சை தேவைப்படுவதாகவும், விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும், கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் – இந்திய வானிலை ஆய்வு மையம்

அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. எனவே, விஜயகாந்த் குறித்து அடுத்தடுத்து வெளியான மருத்துவ அறிக்கை, அவரது உடல்நிலை என்ன நிலையில் இருக்கிறது எ பேசப்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், தேமுதிக தொண்டர்கள் என பலரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்த சூழலில் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

மருத்துவமனையுடன் தொடர்ந்து பேசி வருகிறோம், பருவகாலத்தில் வரும் இருமல் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. ஏற்கனவே மாற்று அறுவை சிகிச்சை (transplant) செய்துள்ளதால், இருமல் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. இருப்பினும், விஜயகாந்த் நன்றாக இருக்கிறார், சீராக உள்ளார். மேலும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்