தமிழகத்தில் எத்தனை பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு அறிகுறி? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த தகவல்!

Default Image

தமிழகத்தில் 118 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில்,இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 578 ஆக இருந்த நிலையில்,தற்போது 653 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று தகவல் தெரிவித்துள்ளது.

குறிப்பாக,ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 653 நபர்களில்,186 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும்,467 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.குறிப்பாக, தமிழகத்தில் 34 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,தமிழகத்தில் 118 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டு உள்ளதாகவும்,பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கூறியதாவது:

“தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதற்கிடையில்,தமிழகத்தில் 118 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது.அவர்களது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.அதன் முடிவுகள் வந்த பின்னரே எத்தனை பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியும்.

மேலும்,தற்போதைய நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது,மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

அதுமட்டுமல்லாமல்,நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தால் கண்காணிக்கப்படும்.எனினும்,நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக அறிவிப்புகள் வராமல் இருப்பது மகிழ்ச்சி.அதே சமயம் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

மேலும்,இரவு நேர ஊரங்கு குறித்து டிச.31 ஆம் தேதி முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு தெரிய வரும்”,என்று அறிவுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்