கொரோனா குறைந்தவுடன் அம்மா மினி கிளினுக்குகள் திறக்கப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!
கொரோனா தொற்று பாதிப்பு குறைந்தவுடன் அம்மா மினி கிளினுக்குகள் திறக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக ஊதிய உயர்வு கோரி அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில்,மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பிற அதிகாரிகள் சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு அரசு மருத்துவமனை கழகத்தில் நேற்று அரசு மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனையடுத்து,செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்:”தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது.அதன்படி,கொரோனா பாதிப்பு பூஜ்ஜியம் நிலையை எட்டும்போது அம்மா மினி கிளினிக்குகள் மீண்டும் திறக்கப்படும்.
மேலும்,கொரோனா 3 ஆம் அலை வருவதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை.எனினும்,மக்கள் நோய்தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்”,என்று தெரிவித்தார்.