தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த ஆண்டு ஜூலை 1 முதல் மகப்பேறு விடுப்புக்கான கால அளவவானது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு 1 வருடமாக உயர்த்தப்பட்டது.இந்த விடுப்பை பிரசவத்துக்கு முன்,பின் என பிரித்து அரசு ஊழியர்கள் எடுத்துக் கொள்ளவும்,விடுப்பு சமயத்தில் அவர்களுக்கு முழு சம்பளம் வழங்கவும் அனுமதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து,அரசு ஊழியர்களுக்கு குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும்,குழந்தை பிறந்து சிறிது காலம் கழித்து இறந்து விட்டாலும் அவர்களுக்கும் 365 நாட்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில்,தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையில் பணி புரியும் ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது:
“மக்களை தேடி மருத்துவத்திட்டதின்கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கான ஊதியம் ரூ 14,000-லிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்படும். அதைப்போல,ஹெல்த்கேர் திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூ.3000 ஊதியம் உயர்த்தி வழங்கப்படும்.மேலும்,தேசிய நலவாழ்வு குழுவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 30% ஊதிய உயர்வு வழங்கப்படும்
குறிப்பாக,தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையில் பணி புரியும் ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும்.ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்காக புணர்வாழ்வு மையம் அமைக்கப்படும்”,என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர்,”தமிழகத்தில் குரங்கு அம்மை இல்லை “,என்று தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…