வாழ்நாள் சாதனையாளர் விருதினை பெற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன்..! வாழ்த்து தெரிவித்த முதல்வர்..!

Default Image

வாழ்நாள் சாதனையாளர் விருதினை பெற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு  வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.

உலகத்தமிழ் நிறுவனம் சார்பாக லண்டனில் நான்காவது சர்வதேச மருத்துவ சிறப்பு விருது வழங்கும் விழா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு கொரோனா பெருந்தொற்று காலத்தில் திறம்பட செயல்பட்டதற்காக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இந்த விருதினை அவரது சார்பில் அவரது மகனும், மருத்துவருமான இளஞ்செழியன் மற்றும் அவரது மருமகள் கிருத்திகா இளஞ்செழியன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதனையடுத்து இந்த விருதினை பெற்ற அமைச்சர் சுப்பிரமணியனுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

அந்த பதிவில், ‘சென்னை மேயராக, சட்டமன்ற உறுப்பினராக, மாரத்தான் வீரராகத் தன்னை நிரூபித்த மா.சுப்பிரமணியன் அவர்கள், தற்போது மாண்புமிகு மருத்துவத்துறை அமைச்சராகவும் தன் ஆற்றலை நிரூபித்துப் பெற்றிருக்கும் Outstanding Response To Covid19 எனும் உலகளாவிய அங்கீகாரத்துக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்.’ என பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்