சென்னை ஸ்டான்லி மருத்துவமனை லிப்டில் சிக்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், லிபியில் ஏற்பட்ட பழுது காரணமாக லிப்டில் சிக்கிக் கொண்டார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், திட்டங்களை துவங்கி வைப்பதற்காக வருகை புரிந்தார்.
அப்போது அறுவை சிகிச்சை துறை கட்டடத்தில் லிப்டின் இயக்கம் தடைபட்டதால், லிப்ட்டினுள் சிக்கிக் கொண்டார். இதனையடுத்து அவர், லிப்டின் ஆபத்துக்கால கதவின் வழியே வெளியேறினார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் லிப்டில் சிக்கிய அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் லிப்ட்டினுள் சிக்கிக் கொண்டதால் சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.