புயல் சின்னம் குறித்து 3 துறை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை.! அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்.!
புயலை எதிர்கொள்ள அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து 3 துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் இன்று புயலாக வலுப்பெற்று வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு மான்டேஸ் எனும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரியில் இன்று மற்றும் நாளை மிகக்கனமழை பெய்யக்கூடும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறுகையில், தமிழகத்தில் புயல் சின்னம் உருவாகியுள்ளது. அதனை எதிர்கொள்ள அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து 3 துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.