ஆரம்பமானது ‘நலம் 365’ யூ-டியூப் சேனல்.! அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடக்கம்.!
நலம் 365 எனும் யூ- டியூப் சேனலை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இன்று புதியதாக யூ-டியூப் சேனல் துவங்கப்பட்டது. நலம் 365 என்ற யூ-டியூப் சேனலை இன்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் துவங்கி வைத்தார்.
இந்த நலம் 365 எனும் யூ-டியூப் சேனலில் எந்தெந்த மருத்துவமனைகளில் என்னென்ன கட்டுமானவசதிகள் உள்ளன என்பது பற்றியும், எந்த மருத்துவமனையில் எதற்கான சிறப்பு மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்ற விவரங்கள், கிடைக்கும் நேரத்தில் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வசதி என பல்வேறு வசதிகள் அதில் குறிப்பிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.