நீட் தேர்வு : நடந்து முடிந்த நீட் தேர்வில் 1,500-க்கும் அதிகமானோருக்கு கூடுதல் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதற்கு எதிராக பிரபல கல்வி தொழில்நுட்ப நிறுவன தலைவர் அலக் பாண்டே என்பவருடைய தரப்பில் இருந்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட விவகாரம் பேசும்பொருளாகி உள்ளது.
இந்த விவகாரம் குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் என்பது மாபெரும் மோசடி என்று பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது ” நடந்து முடிந்த நீட் தேர்வில் 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெறுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. சட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வு தொடர்பான தீர்ப்பை நீட் தேர்வுக்கு பொருந்திப்பார்ப்பது சரியல்ல.
நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கியது மாபெரும் மோசடி. நீட் தேர்வு மோசடியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு முறையான நீதி வழங்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்றம் எந்த இடத்திலும் கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு தரவில்லை. அப்படி தந்திருந்தால் அதற்கான நகலை காமிங்கள் ஏதன் அடிப்படையில் கருணை மதிப்பெண் வழங்குகிறீர்கள்? இந்த கருணை மதிப்பெண்ணை எத்தனை பேருக்கு கொடுப்போம் என்று சொன்னீர்கள் என்ற கேள்வியை தேர்வு முடிவுகள் வெளியாகும் போது நாங்கள் தான் கேட்டோம். அதற்கு பிறகு தான் இதனை புரிந்து கொண்டு பல அரசியல் கட்சிகளும் கேள்விகளை எழுப்ப தொடங்கி இருக்கிறார்கள்.
தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இருந்தவரை தமிழ்நாட்டுக்குள் நீட் தேர்வு வரவில்லை. எடப்பாடி பழனிச்சாமி வந்த பிறகு தான் நீட் தேர்வு தமிழகத்திற்கு வந்தது. நடந்து முடிந்த இந்த நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது மிகப்பெரிய மோசடி. இத்தேர்வில் குழப்பமும் குளறுபடியும் தொடர்ந்து நடைபெற்றுதான் வருகிறது.
நேரப் பற்றாக்குறையால் நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.நீட் தேர்வை ஒழிக்க கண்டிப்பாக அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கவேண்டும்” எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…