#Breaking : ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி.! அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவிப்பு.!
கொரோனா காலகட்டத்தில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் அதிகபட்சமாக செவிலியர்கள் தேவை ஏற்பட்டதால், தமிழக அரசு ஒப்பந்த முறையில் செவிலியர்களை பணியமர்த்தியது. அதன் பிறகு கொரோனா தாக்கம் முடிந்த பின்னர் பலருக்கு பணி நீட்டிப்பு கொடுக்காமல் இருந்து வந்தது.
இதனை எதிர்த்து, ஒப்பந்த செவிலியர்கள் அவ்வப்போது தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறுகையில், ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படும் என உறுதியளித்தார்.
தமிழக அரசின் வீடு தேடி மருத்துவம் மற்றும் ஆரம்ப சுகராதர மையங்களில் பணி என மாற்று பணி ஏற்பாடு செய்யப்படும் எனவும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து தகுதியான செவிலியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பணிநீட்டிப்பு வழங்கப்படும் எனவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இதனால் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த செவிலியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடுமாறு அமைச்சர் மா.சுப்ரமணியன் கேட்டுக்கொண்டார்.