ஆளுநர் கையெழுத்திட்ட மறுநாளே தமிழகத்தில் சித்த மருத்துவ கல்லூரி… அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி.!
தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் துவங்கப்படுவதற்காக சட்ட மசோதாவானது தமிழக அரசு சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களால் தமிழக சட்ட பேரவையில் கடந்த ஆண்டு தாக்கல் செய்து இருந்தார்.
அதில், இயல், இசை கலை பல்கலைக்கழத்தை தவிர, தமிழ்நாட்டில் உள்ள பிற அரசுப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் வேந்தராக ஆளுநரே இருந்துவரும் நிலையில், புதிதாக தொடங்கப்படும் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராக தமிழகமுதல்வர் பொறுப்பு வகிப்பார் என அந்த சட்ட முன்வடிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் கையெழுத்திடாமல் இருந்து வருகிறார். உரிய விளக்கம் கேட்டுள்ளதாக ஆளுநர் மாளிகையும், மசோதாவுக்கு கையெழுத்திடாமல் இருந்து வருகிறார் என தமிழக அரசும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் சித்த மருத்துவ கல்லூரி அமைக்க சட்ட மசோதவனது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் கையெழுத்திட்ட மறுநாளே தமிழகத்தில் சித்த மருத்துவகல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.