குடிநீர் தட்டுப்பாட்டில் புதுசேரி.! என்.எல்சி.யிடம் தண்ணீர் கேட்டுள்ள அரசு.! அமைச்சர் விளக்கம்.!
புதுச்சேரி குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க முதற்கட்டமாக என்எல்சி நிர்வாகத்திடம் இருந்து புதுச்சேரி அரசு குடிநீர் கேட்டுள்ளது என அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெருமளவில் அவதிப்படுகின்றனர். இதனை தீர்க்க அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
என்எல்சி – குடிநீர் :
அவர் கூறுகையில், என்.எல்.சியில் இருந்து கடலில் கலக்கும் நீரில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பிரித்தெடுத்து, அதனை மக்களுக்கு விநியோகிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது எனவும், முதற்கட்டமாக, 5 முதல் 10 எம்எல்டி தண்ணீரை வாங்க அரசு முடிவு செய்து அனுமதி கேட்டுள்ளது என்றும்,
சிவப்பு மண்டலம் :
அதேபோல, நிலத்தடி நீர் உப்புநீராக இருக்கும் பகுதிகளை கண்டறிந்து அவைகள் சிவப்பு மண்டலம் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தினந்தோறும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்களை வழங்க உள்ளோம் எனவும்,
கடல்நீர் – குடிநீர் :
மேலும், கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தை செயல்படுத்த போவதாகவும், அதற்கான டெண்டர் கோரபட்டு, முதற்கட்டமாக, பிள்ளைச்சாவடி, உப்பளம் பகுதிகளில் செயல்படுத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுளளது.
தடுப்பணை :
அதே போல, புதுச்சேரியில் பாயும் நதிகளின் 3 கிமீ இடைவெளி விட்டு அதன் குறுக்கே தடுப்பணை கட்டி நிலத்தடி நீரை பெருக்க உள்ளோம். இதற்காக அரசு அனுமதியின்றே நிலத்தடி நீரை உறிஞ்சலாம் எனவும் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.