மழைநீர் தேங்கினால் உடனடி நடவடிக்கை.! – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்.!
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. மழைநீர் தேங்கினால் உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கபடும். – தமிழக அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்துள்ளார்.
இன்னும் சில தினங்களில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பெய்ய தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் இந்த பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்தாலும், இன்னும் பல்வேறு பகுதிகளில் இணைப்பு கொடுக்கப்படாமல் இருக்கிறது. இதனால், அந்த பகுதிகளில் மின் மோட்டார் தயார் நிலையில் இருக்கிறது.
இது குறித்து, தமிழக அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், ‘ சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. மழைநீர் தேங்கினால் உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கபடும்.
மழைநீர் தேங்கினால் மின் மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை துரிதமாக எடுக்கப்படும்.’ என தமிழக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.