மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அமைச்சர் காமராஜ்..!

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தற்போது குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
அமைச்சர் காமராஜிக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து கடந்த மாதம் 5-ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025